SHARE

இனப்படுகொலைக்கு நீதி கோரி திரண்ட புலம்பெயர் தமிழர்கள்

தமிழ் இனத்திற்கு எதிரான மனிதப்படுகொலையின் 10 ஆவது அண்டு நாளான இன்று இழைக்கப்பட்ட அநீதி;க்கு நீதிகோரி பிரித்தானியாவின் பெரு நகர் வீதியில் திரண்ட மக்கள் மாபெரும் பேரணியில் ஈடுபட்டனர். 

லண்டன் பெரு நகரமே முடங்கும் வகையில் வீதியில் திரண்ட புலம்பெயர் தமிழர்கள் தேசியக்கொடிகளை கைகளில் ஏந்தியவாறும் இனப்படுகொலையை சித்தரிக்கு காட்சிக்களை பிரதிபலித்தவாறு கோசங்களை எழுப்பியவாறு பிரித்தானிய பிரதமர் வாசல்ஸ்தலம் நோக்கி நகர்ந்தனர். 

சிங்களப்பேரினவாதத்தினால் தமிழ் இனத்திற்க எதிராக நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரவலம் நடைபெற்று இன்றுடன் 10 ஆண்டுகள் எட்டியுள்ள நிலையில் உலகமெங்கும் வாழும் தமிழர்கள் இன்று முள்ளிவாய்க்கால் தினத்தை உணர்வுபூர்வமாக அனுஷ்டித்து வருகின்றனர். 

இந்நிலையில் புலம்பெயர் தமிழர்கள் செறிந்து வாழும் பிரித்தானியாவிலும் முள்ளிவாய்க்கால் தின நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக நடைபெற்றன. 

அந்தவகையில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் லண்டன் Green Park இல் இருந்து பி.ப. 2 மணியளவில் ஆரம்பமான எழுச்சிப்பேரணி சற்று 10 டவுனிங் வீதியிலுள்ள பிரித்தானிய பிரதமர் வாசஸ்தலத்தின் முன் சென்றடைந்து எழுச்சி கூட்டத்துடன் நிறைவு பெற்றது. 

Print Friendly, PDF & Email