SHARE
image_pdfPRINT

தடைசெய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு  மாவட்ட அமைப்பாளர் மொஹமட் பாருஸ் மொஹமட் பவாஸ் இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது நீதிவான் அவரை 72 மணி நேர தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று மாலை கொழும்பு, வழைத்தோட்டம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது கைதுசெய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.