SHARE

இன்று  அதிகாலை 5.00 மணிமுதல் நண்பகல் வரை வடமராட்சியின் பருத்தித்துறை நகர்,  மெத்தைக்கடை சந்தி , முதலாம் குறுக்கு தெரு தொடக்கம் மூன்றாம் குறுக்கு தெரு வரையான பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதி மற்றும் நெல்லியடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நெல்லியடி சந்தி தொடக்கம் வதிரி சந்தி வரையான நெல்லியடி நகருக்கு வடக்கு பக்கமான பகுதிகள் ஆகியவற்றில் பொலிசாரும்,  இராணுவத்தினரும் பெருமளவில் குவிக்கப்பட்டு பாரியளவிலான தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டது.

இதில் சந்தேகத்திற்கிடமான வீடுகள் சில சோதனைக்குட்படுத்தப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். 

இதனைத் தவிர வீதிகளில் பயணித்தவர்களின் அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்பட்டதுடன்,  சந்தேகத்திற்கிடமான வாகனங்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டது.