SHARE

தற்கொலை குண்டுதாரியின் சகோதரி

இலங்கையில் உயிர்த்தஞாயிறு தினத்தன்று தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட தீவிரவாதி அவுஸ்திரேலியாவிலேயே தீவிரவாதமயப்படுத்தப்பட்டார் என அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.

கொழும்பு தெகிவளைஹோட்டலில் தன்னை வெடிக்கவைத்த அப்துல் லத்தீவ் ஜமீல் முகமட் தொடர்பிலேயே அவரது சகோதரி இதனை தெரிவித்துள்ளார்.

மெல்பேர்னிலிருந்து இலங்கை திரும்பிய அப்துல் முகமட் கடும் சீற்றமடைந்தவராக காணப்பட்டார் என  தெரிவித்துள்ள அவரது சகோதரி ஏன் தாடி வளர்க்கவில்லை என அவர் தனது உறவினர்களை ஏசினார் என குறிப்பிட்டுள்ளார்

அவர் கடுமையானதீவிரவாத கொள்கைகளை பின்பற்றுபவராகவும் தனிமைப்படுத்தப்பட்டவராகவும் காணப்பட்டார் எனவும் சகோதரி தெரிவித்துள்ளார்

அவர் அவுஸ்திரேலியாவிலிருந்தவேளை தீவிரமத விசுவாசியாக மாறினார் என குறிப்பிட்டுள்ள சகோதரி பிரிட்டனிற்கு கல்வி கற்க சென்று திரும்பியவேளை அவர் சாதாரணமானவராக காணப்பட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார்

அவுஸ்திரேலியாவில் பட்டமேற்படிப்பை மேற்கொண்டு நாடு திரும்பிய பின்னர் அவர் வித்தியாசமான மனிதராக காணப்பட்டார் என சகோதரி தெரிவித்துள்ளார்

அவர் நீண்ட தாடி வளர்த்திருந்தார் நகைச்சுவை உணர்வை இழந்திருந்தார் எனவும் அவரது சகோதரி குறிப்பிட்டுள்ளார்.

எனது சகோதரர் முன்னர் மதவிடயங்களில் ஆர்வமுள்ளவராக காணப்பட்டாலும் இசையை ரசிப்பவராகவும் மகிழ்ச்சியானவராகவும் காணப்பட்டார் என ஹிதாயா தெரிவித்துள்ளார்

ஆனால் இவை அனைத்தும் அவுஸ்திரேலியாவில் மாற்றமடைந்தன எனவும் குறிப்பிட்டுள்ள அவர் தனது சகோதானின் புதிய போக்கினால் குடும்பத்திற்குள் குழப்பம் காணப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

என்ன நடந்தது என்பது எனக்கு கவலையளிக்கின்றது,இறப்பதற்கு முன்னர் அவர் குழந்தைகளை கூட இசையை ரசிப்பதற்கு அனுமதிக்கமாட்டார் அவர் எவருடனும் சினேகமாக ஒரு வார்த்தை கூட பேசியதில்லை எனவும் சகோதரி தெரிவித்துள்ளார்.


Print Friendly, PDF & Email