SHARE

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியோர் தேவாலயத்தில் இன்று காலை பாரிய  குண்டு வெடிப்பு ஒன்று இடம் பெற்றுள்ளது.

காலை 8.00 மணியயளவில் நடைபெற்ற இச் சம்பவத்தில் 26 பேர் பலியானதுடன், 160 பேர் காயமடைந்த நிலையில்,  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கொழும்பு கொச்சிக்கடை மற்றும் கட்டான பகுதியிலுள்ள இருதேவாலயங்களில் பல குண்டுகள் வெடித்துள்ளன.

பலர் உயிரிழந்துள்ளதோடு பலர் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலதிக செய்திகளுக்கு எமது இணையத்தளத்துடன் இணைந்திருங்கள்.