SHARE

படுகொலைச் செய்யப்பட்ட, பத்திரிகையாசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் மகள், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக, சிவில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார்.

அமெரிக்கா நீதிமன்றத்திலேயே இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்காவுக்குச் சென்றுள்ள கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் 12 ஆம் திகதி வரையிலும் அங்கு தங்கியிருக்கின்றார்.

அமெரிக்கா மற்றும் இலங்கை இரட்டை பிரஸதவரமையினை கொண்டுள்ள அவர் அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கனவுகளுடன் தற்போது திரிந்துவருவது குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email