SHARE
image_pdfPRINT

யாழ்.சாவகச்சேரி பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள உணவகத்தில் பணியாற்றிய இளைஞனை காணவில்லை என தந்தை முறைப்பாடு செய்துள்ளார்.

யாழ்.சுழிபுரம் கிழக்கை சேர்ந்த மனோரஞ்சன் சஜிந்தன் (சயந்தன்) எனும் இளைஞனையே காணவில்லை.

குறித்த இளைஞன் மறவன்புலவு பகுதியில் தற்காலிகமாக தங்கி இருந்து உணவகத்திற்கு வேலைக்கு சென்று வந்தார் எனவும், அந்நிலையில் கடந்த 19ஆம் திகதி வேலைக்கு சென்றவர் நேற்று செவ்வாய்க்கிழமை வரை வீடு திரும்பவில்லை என தந்தையார் தெரிவித்தார்.