SHARE

தான் சார்ந்த இனத்திற்காகா விடா முயற்சியுடனும் அர்ப்பணிப்புடன் செயலாற்றிய மாபெரும் மனிதரை தமிழ் மக்கள் இழந்து விட்டார்கள் என காலம்சென்ற திரு. வைரமுத்து வரதகுமார் குறித்து பிரித்தானிய பாராளுமன்றின் எதிர்க்கட்சித்தலைவர் ஜெரமிக் கோபன் கவலை தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் அனைத்து தரப்பினரிடையேயும் நன்கு அறிமுகமானவரும் தமிழ் மக்களுக்காக தன் வாழ் நாள் முழுவதையும் அர்ப்பணித்து செயலாற்றி வந்தவருமான தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) இயக்குனர் திரு.வைரமுத்து வரதகுமார் அண்மையில் சுகவீனம் காரணமாக காலமானார்.

இந்நிலையிலேயே வரதகுமாரை நன்கு பரிட்சையமான பிரித்தானிய எதிர்க்கட்சித்தலைவர் அவரது மரணம் குறித்து அனுப்பிவைத்துள்ள இரங்கல் செய்தியில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

காலம்சென்ற திரு. வரதகுமார் அவர்களை நான் 1980 ஆண்டு பாராளுமன்றில் முதன் முதலில் சந்தித்தேன். மிகவும் சுயாதினமானவர். தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அவர்களின் சுதந்திரத்திற்காக அயராது போராடி வந்தவர். இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்டு போரினால் பாதிக்கப்பட்டு பிரித்தானியாவிற்கு அகதியாக வந்த ஒவ்வொருவரினதும் உரிமைகளுக்காக அயராது உழைத்தார்.

புpரித்தானியாவில் அகதி அந்தஸ்து குறித்த வழக்குகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாகவே செல்வாக்கு செலுத்தமுடிந்த காலத்தில் திரு. வைரதகுமாரின் உதவியுடன் துணிச்சலாக அவர்களுக்கு என்னால் ஆதரவு வழங்க முடிந்தது. அவர் ஒவ்வொரு விடயத்தையும் செயற்பாடையும் மிகுந்த சிரத்தையுடன் செய்து வந்தவர்.

கடந்த 1984 இல் நான் இலங்கைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தேன். அதன் பின்னர் இலங்கை தொடர்பான தகவல்களை புதுப்பித்தல்களை வரதகுமார் தலைமை தாங்கியிருந்த தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) ஊடாகவே அறிந்து வந்தேன்.

இந்நிலையில் திரு.வரதகுமாரின் திடீர் மறைவு செய்தி எனக்கு அதிர்ச்சியளிக்கும் விடயமாக உள்ளது. அவரது பிரிவால் வருந்தும் நண்பர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்கிறேன். தனது மக்களுக்களின் விடுதலைக்காய் அர்ப்பணிப்புடனும் விடா முயற்சியுடனும் செயற்பட்டு வந்த அற்புத மனிதரை நாம் இழந்துவிட்டோம் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email