SHARE
image_pdfPRINT

வடமராட்சி பகுதியை சேர்ந்த வயோதிப பெண் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போன நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை பாழடைந்த வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

புலோலி கிழக்கை சேர்ந்த சோமஸ்கந்தன் விசாலாட்சி (வயது 80) எனும் வயோதிப பெண்ணே சடலமாக மீட்கபட்டு உள்ளார். 
குறித்த பெண் மணி கடந்த 20ஆம் திகதி காணாமல் போயுள்ளார். அது தொடர்பில் உறவினர்களால் பருத்தித்துறை போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில் வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுஉள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.