SHARE

யுத்தத்திற்கு பிந்திய நிலைமாற்று நீதி நடைமுறைக்கு நிலையான கால அட்டவணையுடன் கூடிய முழுமையான  தந்திரோபாயத்தை நடைமுறைப்படுத்துமாறு ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்லே பச்லெட்  இலங்கையை கேட்டுக்கொண்டுள்ளார்

சுயாதீன உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்துவதே அடுத்த முக்கியமான நடவடிக்கையாக அமையவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

ஜெனீவாவில் இன்று இலங்கை குறித்த அறிக்கையை உத்தியோகபூர்வமாக சமர்ப்பித்த பின்னர் அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்

சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மனிதாபிமான உரிமை மீறல்கள் ஆகியவற்றை பாரதூரமான முறையில் மீறியதாக குற்றம்சாட்டப்படும் சவேந்திர சில்வாவிற்கு இலங்கை இராணுவத்தில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளமை குறித்து சுட்டிக்காட்டியுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்லே பச்லெட்  இது கவலைதரும் விடயம் என தெரிவித்துள்ளார்

Print Friendly, PDF & Email