SHARE

பிரித்தானிய நீதிமன்றில் அதிர்ச்சித் தகவல் வெளியானது

-நீதிமன்றிலிருந்து ஊடகவியலாளர் சுகிர்தன்

பிரித்தானியாவிலுள்ள தமிழ் செயற்பாட்டாளர்கள் மற்றும் இலங்கை அரசிற்கு எதிரானவர்களை உளவு பார்ப்பதற்காக இலங்கை அரசினால் உத்தியோக பூர்வமாக இராணுவ அதிகாரிகள் லண்டனுக்கு அனுப்பப்படுவதுடன் செயற்பாட்டாளரின் விபரங்கள் இலங்கை அரசினால் சேகரிக்கப்படுகிறது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரியங்கா பெர்னாண்டோவுக்கு எதிராக ICPPG யினால் பிரித்தானிய நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் இன்று நடைபெற்ற விசாரணைகளிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

சர்சைக்குரிய பிரியங்கா பெர்னாண்டோ தரப்பினரது வாதங்கள் இன்று மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது தூதரக அதிகாரியாக பிரியங்கா பெர்னாண்டோவிற்குரிய உத்தியோக பூர்வ கடமைகள் தொடர்பிலான பட்டியல் அறிக்கையிடப்பட்டது. அந்த அறிக்கையிலேயே மேற்படி தகவல் வெளிவந்துள்ளது.

அந்தவகையில் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரியாக கடமைபுரிந்த பிரியங்கா பெர்னாண்டோவிற்குரிய உத்தியோக பூர்வ கடமைகளில் பிரித்தானியாவில் இடம்பெறும் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை கண்காணித்து இலங்கை உயர்ஸ்தானிகம் மற்றும் அதன் செயலாளர் ஊடாக இலங்கையிலுள்ள பாதுகாப்பு அமைச்சு வெளியுறவு அமைச்சு மற்றும் இலங்கையிலுள்ள புலனாய்வு முகவர்களுக்கு அறிக்கை வழங்குதல்

அதேபோல் பிரித்தானியாவிலுள்ள தமிழ் செயற்பாட்டாளர்கள் அதன் நிகழ்வுகளில் ஈடுபடுபவர்கள் தொர்பிலும் இலங்கை புலனாய்வுத்துறையினருக்கு அறிக்கையிடுதல் என்பன இடம்பெற்றுள்ளது

இந்நிலையிலேயே, பிரித்தானியாவிலுள்ள தமிழ் செயற்பாட்டாளர்கள் இலங்கை இராணுவத்தினரால் உழவு பார்க்கப்படுவதுடன் உயர்ஸ்தானிகத்தினரால் அவரது விபரங்கள் இலங்கை அரசிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


Print Friendly, PDF & Email