லண்டன் வாழ் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சர்ச்சைக்குரிய அதிகாரி பிரியங்கா பெர்ணான்டோ மீதான வழக்கில் அரசியல் அழுத்தம் வேண்டாம்! பிரித்தானிய நீதித்துறையே நியாமான தீர்ப்பை வழங்கு! எனக் கோரி பிரித்தானிய நீதிமன்ற முன்றலில் புலம்பெயர் தமிழர்கள் சற்று முன்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு லண்டன் வாழ் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி பிரியங்கா பெர்னாண்டோவுக்கு எதிராக இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையத்தினால் (ICPPG) தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடுத்த கட்ட விசாரணை இன்று (1) வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றில் நடைபெறவுள்ள நிலையிலேயே குறித்த நீதிமன்ற முன்றலில் ஒன்றுதிரண்ட பெருமளவிலான தமிழர்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.





