SHARE

நாடளாவிய ரீதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலைவரை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 3ஆயிரத்து 711 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், வாகனப் போக்குவரத்து விதி மீறல் சம்பந்தமாக 5ஆயிரத்து 818 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய இந்த விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்றது.

சட்டவிரோதபோதைப்பொருள் பாவனை, விற்பனை மற்றும் கடத்தலை தடுப்பதற்கும், குற்றச்செயல்களை குறைப்பதற்கும் பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் அண்மைக்காலமாக திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email