SHARE

யாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பண்டத்தரிப்பு சாந்தை பகுதியில் இன்று மதியம் விளையாடிக் கொண்டிருந்த சதீஸ்வரன் வினோத் (13), சதீஸ்வரன் பூஜா (8) ஆகியோரே காரில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.

வீட்டிற்கு அருகிலுள்ள வெட்டை பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அங்கு வெள்ளை நிற காரில் ஆணும், பெண்ணுமாக வந்த இருவர், சிறார்களை அருகில் அழைத்து பலவந்தமாக காரில் ஏற்றிச் செல்லப்பட்டதாக அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடத்தப்பட்டதாக குறிப்பிடப்படும் வினோத், இளவாலை புனித ஹென்ரியரசர் கல்லூரியிலும், பூஜா சாந்தை சிற்றம்பலம் வித்தியாலயத்திலும் கல்வி கற்கிறார்கள்.

இது தொடர்பில் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டிற்கு அருகில் இருந்த விளையாட்டிடத்தில் இருந்து கடத்தப்பட்டதாக பெற்றோர் குறிப்பிட்டபோதும், வீட்டிலிருந்து கடத்தப்பட்டதாக பொலிஸாரால் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email