SHARE

சர்வதேச ஊடகமான Sky நியூஸ் செய்தி சேவை தெரிவிப்பு

யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகளை எட்டியுள்ள போதிலும் இலங்கையில் இன்றும் தொடரும் சித்திரவதைகள் மற்றும் ஆட்கடத்தல்களினால் போலி கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தியாவது நாட்டை விட்டு வெளியேறும் நிலமைக்கு இலங்கை வாழ் தமிழர்கள் தள்ளப்படுகிறார்கள் என சர்வதேச ஊடகமான Sky செய்திச் சேவை இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையிலிருந்து வெளியேறி பிரித்தானியாவில் அகதி தஞ்சம் கோரியுள்ள சிலருடனான நேர்காணலையடுத்தே குறித்த ஊடகம் இதனைத் தெரிவித்துள்ளது.

மேலும் அதில் இலங்கையில் சித்திரவதைகளிலிருந்து தப்பி போலி கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி வெளிநாடுகளில் அகதி தஞ்சம் கோருபவர்கள், வெளிநாடுகளிலும் அன்றாட வாழ்க்கைய கொண்டு நடத்த கடும் போராட்டத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் சிலருக்கு ஆலயங்களும் தொண்டு நிறுவனங்களும் தங்குவதற்கு இடம் வழங்குவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் பலர் வெவ்வேறு இடங்களில் ஒரு சிறிய அறையினிலேயே சமயல் மற்றும் படுக்கை என அனைத்தையும் மேற்கொண்டு மிகவும் கடினமான வாழக்கையை வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


https://news.sky.com/story/how-sri-lankans-are-getting-into-uk-illegally-revealed-11639382

Print Friendly, PDF & Email