SHARE

பிடியாணை தள்ளுபடியானது; அடுத்த கட்ட வழக்கு மார்ச் முதலாம் திகதி

கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி பிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிரான வழக்கில் அவருக்கு எதிராக நிரூபிக்கப்பட்ட இரு குற்றச்சாட்டுக்களும் நீதிமன்றினால் நீக்கப்படவில்லை.

அதேவேளை அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதுடன் அடுத்த கட்ட வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

லண்டன் வாழ் தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி பிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிரான வழக்கு இன்று லண்டன் வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றில் நடைபெற்றது.

குறித்த அதிகாரிக்கு எதிரான சட்ட வல்லுனர் கீத் குலசேகரம் அவர்களின் வழிநடத்தலின் கீழ் ICPPG அமைப்பினால் தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் திகதி பிரியங்கா பெர்ணான்டோவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றில் 3 பேர் கொண்ட நீதிபதிகள் குழு அவருக்கு எதிரான இரு குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதுடன் பிடியாணையையும் பிறப்பித்திருந்தனர்.

எனினும் இந்த பிடியாணைக்கு இலங்கை அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் வெளிநாட்டு அமைச்சின் ஊடாக அவருக்கு இருந்த இராஜதந்திர பாதுகாகப்புக்களை காரணம்காட்டி குறித்த வழக்கை மீண்டும் நீதிமன்றுக்கு எடுத்திருந்தனர்.

இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று காலை வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றின் பிரியங்கா பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு நடைபெற்றது. முதலாம் இலக்க அறையில் இடம்பெற்ற இவ்வழக்கில் பிரியங்கா தரப்பு சட்டத்தரணிகளும் இம்முறை மன்றில் ஆஜராகியிருந்தனர்.

இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணையின் இறுதியில் பிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிராக நிரூபிக்கப்பட்ட இரு குற்றச்சாட்டுக்களும் நீக்கப்படவில்லை. அதேவேளை அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை பிரதம நீதிபதியினால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதேவேளை பிரியங்கா தரப்பிலிருந்து ஆஜராகியிருந்து சட்டத்தரணிகள் தங்கள் தரப்பு நியாஜங்களை தயார்ப்படுத்த கால அவகாசம் கோரியமையினால் குறித்த வழக்கினை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு பிரதம நீதிபதி அவர்கள் தள்ளி வைத்தார்.

இதனிடையே குறித்த வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்த சமவேளையின் நீதிமன்றின் முன்றலில் ஒன்று திரண்ட பெருமளவிலான தமிழர்கள் பிரியங்கா பெர்ணான்டோவிற்கு எதிரான பிடியாணை இரத்து செய்யப்பட்டமையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிராக ICPPG யினால் முன்னெடுக்கப்பட்டுள்ள குறித்த வழக்கின் சட்ட ஆலோசகரரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான கீத் குலசேகரம் இன்றைய வழக்கின் முடிவு குறித்து கருத்து தெரிவிக்கையில்,

Print Friendly, PDF & Email