SHARE
image_pdfPRINT

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று மட்டக்களப்பு மகிழடித்தீவு சந்தியில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் உணர்வு பூர்வமாக நினைவுகூறப்பட்டது.

ஈழத்தமிழர்களின் வரலாற்றில் மறக்கமுடியாத படுகொலை நிகழ்வுகளில் கொக்கட்டிச்சோலை படுகொலையும் ஒன்று. கிழக்கு ஈழத்தை மாத்திரமின்றி ஒட்டுமொத்த ஈழத்தையும் உலுக்கிய அப்படுகொலையில் உலகமே அதிர்ந்தது.

தமிழ் இனத்தை இன அழிப்பு செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட அப்படுகொலை நிகழந்து இன்றுடன் 32 வருடங்களாகிவிட்டன. படுகொலை நிகழ்ந்து 32 வருடங்கள் என்பதை விட அப்படுகொலைக்கான நீதி மறுக்கப்பட்டு 32 வருடங்கள் ஆகிவிட்டன என்பதே உண்மை.