SHARE

வல்வெட்டித்துறை தீருவில் பூங்காவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட 12  பேரின் நினைவு தூபிகளை தவிர்த்து வேறு போராட்ட குழுக்களின் போராளிகளின் நினைவுத் தூபிகள் எதுவும் அமைக்கப்படக் கூடாது என முன்வைக்கப்பட்ட பிரேரணை தவிசாளரின் மேலதிக வாக்குகள் தோற்கடிக்கப்பட்டது.

வல்வெட்டித் துறை நகர சபையின் மாதாந்த அமர்வு இன்று நடைபெற்றது. அதில் தீருவில் பூங்காவில் ஏற்கனவே இருந்து அழிக்கப்பட்ட நினைவுத் தூபியை மீண்டும் நிர்மாணிக்கவும், அங்கு வேறு தூபிகள் அமைக்க வேண்டாம் என்ற பிரேரணை சுயேட்சைக்குழு மற்றும் முன்னணி உறுப்பினர்களால் சபையில் முன்வைக்கப்பட்டது.

இந்தப் பிரேரணையால் சபையில் குழப்ப நிலமை ஏற்பட்டது. அதனால் பிரேரணை தவிசாளரால் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 8 பேரும். எதிராக 8 பேரும் வாக்களித்தனர். அதனால் சமநிலையில் இருந்த நிலையில், தவிசாளர் தனது வாக்கினை பிரேரணைக்கு  எதிராக பதிவு செய்தார். அதனால் ஒரு வாக்கு வித்தியாசத்தில் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.

குறிந்த பூங்காவில் ஏற்கனவே கும­ரப்பா, புலேந்­தி­ரன் உட்­பட 12 போரா­ளி­க­ளுக்­கான நினை­வுத் தூபி அமைக்கப்பட்டிருந்தது. அது அழிக்கப்பட்டிருந்த நிலையில் நினைவுத் தூபியை மீள அமைத்து, அதனுடன் வேறு போராட்ட குழுக்களில் இருந்து உயிரிழந்த சிலரது தூபிகளையும் அமைப்பதற்கு கூட்டமைப்பின் உறுப்பினர் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Print Friendly, PDF & Email