SHARE
image_pdfPRINT

யாழ். நகர் பகுதியில் நேற்று இரவு வீதியை கடக்க முயன்ற பெண்ணொருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

யாழ்.கஸ்தூரியார் வீதியில் நடந்து சென்ற குறித்த பெண் வீதியை கடக்க முற்பட்ட வேளை மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த பெண்ணும் , மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு யால்.போதனா வைத்திய சாலையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பயனின்றி பெண் உயிரிழந்துள்ளார். இதேவேளை இரு இளைஞர்களும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் யாழ்.போலீசார் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளனர்.