SHARE
image_pdfPRINT

முன்னாள்  அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பாலித தேவரப்பெருமா இன்று நாடாளுமன்றிற்குள் கத்தியுடன் வந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது எடுக்கப்பட்ட குறித்த படங்களில் பாலித தேவரப்பெருமா கத்தியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைத் தாக்க வருவதும் அதனை ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுத்து அவரிடமிருந்த கத்தியைப் பறிக்க முற்படுவதுமான தொடர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.