SHARE
image_pdfPRINT

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடனான இன்றைய காலைச் சந்திப்பை புறக்கணிக்க கட்சித்தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தினை ஆதரித்த நாடாளுமன்ற கட்சித் தலைவர்களை இன்று காலை சந்திப்புக்கு ஜனாதிபதி மைத்ரி அழைத்திருந்தார்.

அதேசமயம் ,நேற்று நாடாளுமன்ற தீர்மானங்கள் தொடர்பில் விளக்கி சபாநாயகர் அனுப்பிய கடிதத்திற்கு ஜனாதிபதி மைத்ரி நேற்றிரவு கடுமையான பதில் கடிதமொன்றை வழங்கியிருந்தார்.

இதனையடுத்து நேற்றிரவு கூடிய ஐக்கிய தேசிய முன்னணி பங்காளி கட்சி தலைவர்கள் , ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்புக்கு செல்வது அர்த்தமற்றதென்பதால் அதனை புறக்கணிக்க தீர்மானித்தனர்.