SHARE
image_pdfPRINT

இரத்தினபுரி பலாங்கொடை, பான் குடா ஓயாவில் நீராட சென்ற சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த மூவரும்  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. இந்தத் துயரச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது.

குறித்த விபத்தில் செல்வரட்ணம் திசான் (வயது-25), சரவணபவன் கோபிசன் (வயது-23) மற்றும் கோபாலகிருஷ்ணன் சாரங்கன் (வயது-25) ஆகிய மூவருமே உயிரிழந்தனர்.

உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் பலாங்கொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.