SHARE
image_pdfPRINT

படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  நடராசா ரவிராஜின் 12 ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.

சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள அவரது சிலைக்கு முன்பாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.

இதன் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்  தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா, யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் உள்ளிட்ட உள்ளூராட்சி மற்ற தலைவர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள் பொதுமக்கள் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.