SHARE
image_pdfPRINT

பாராளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படவுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளார்.

ஜனாதிபதி சிறிசேன கையெழுத்திட்டுள்ள வர்த்தமானி பத்திரிகை தற்போது அரச அச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று 9-11-2018 நள்ளிரவு வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.