SHARE
image_pdfPRINT
மனித உரிமை ஆணைக்குழுவில் தந்தை முறைப்பாடு

புலம்பெயர் நாடொன்றிலுள்ள இளைஞர் ஒருவர் குறித்த விசாரணைகளை மேற்கொண்ட இனந்தெரியாத நபர்கள் அவரது தந்தை தாக்கியதுடன் உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் வசிக்கும் யோகராசா இக்னேஸ்வரன் என்ற தனது மகன் குறித்தே தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவரது தந்தையான சுப்பிரமணியம் யோகராசாவினால் வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் நால்வர் வெளிநாட்டில் உள்ள தனது மகன் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான செயற்பாட்டில் ஈடுபடுவதாகவும் அதனை நிறுத்த சொல்லாவிடில் உன்னை கொலை செய்வோம் என அச்சுறுத்தல் விடுத்ததுடன் தாக்குதல் நடத்தி தப்பிசென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.