SHARE
image_pdfPRINT

தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு என எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளெட் அமைப்பின் தலைவருமான த. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

யாழில்.உள்ள தனது இல்லத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணில் அரசுக்கு ஆதரவு கொடுப்போம் என எங்கும் குறிப்பிடவில்லை. தற்போதைய பிரதமர் நியமனம் ஆனது ஜனநாயக அரசியலமைப்புக்கு எதிரான நியமனம் அதனை நாம் எதிர்க்கின்றோம். எனவே தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்சேக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு நாம் ஆதரவு அளிப்போம். அது ரணிலுக்கான ஆதரவு அல்ல என தெரிவித்தார்.