SHARE
image_pdfPRINT

தீக்காயங்களுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த பாடசாலை மாணவி ஒருவர் நேற்றைய தினம் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்.கோண்டாவில் பகுதியை சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கடந்த முதலாம் திகதி தீக்காயங்களுக்கு இலக்காகிய நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டார்.

கடந்த எட்டு நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவி நேற்றைய தினம் திங்கட்கிழமை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.