SHARE
image_pdfPRINT

வடக்கில் சமாதானம் சீர்குலைந்திருப்பதால் சமாதானத்தை கட்டியெழுப்ப வேண்டுமென வலியுறுத்தி யாழில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

யாழ் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று காலை 9 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

வடக்கில் சமாதானம் சீர்குலைந்திருப்பதால் சமாதானத்தை கட்டியெழுப்ப வேண்டும். இதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமல், இருக்கின்றன.

கிழக்கில் சமாதான மாதா மரண தருவாயில் இருக்கும் நிலையில் வடக்கிலும் சமாதானம் சீர்குலைவது   ஆபத்து என்பதால் சமாதானத்தை பாதுகாத்து உலக சமாதானம் உருவாக வேண்டுமென்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர் தெரிவித்தார்.