SHARE
image_pdfPRINT

வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திர தீர்த்தம் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.

வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றது. அந்நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழா இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து இன்றைய தினம் சமுத்திர தீர்த்த திருவிழா நடைபெற்றது. அதன் போது ஆழ்வார் வங்க கடலில் தீர்த்தமாடினார். இன்றைய தீர்த்த திருவிழாவின் போது பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.