SHARE
image_pdfPRINT

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தலின் ஆரம்ப நினைவு நாள் நிகழ்வு நல்லூரில் இன்று நடைபெற்றது.

1987 ஆம் ஆண்டு இதே நாள் ஜந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து லெப். கேணல் திலீபன் நல்லூர் கந்த சுவாமி கோவில் முன்றலில் அகிம்சை வழியில் நீர் கூட அருந்தாது உணவொறுப்புப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.
தமிழ் மக்களின் விடிவுக்காக 12 நாட்கள் தன்னை உருக்கிய அத் தியாக தீபம் வீரகாவியமானார்.

இந்நிலையில் தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பிருந்து காவியமான நல்லூரில் அமைந்துள்ள அவரது நினைவு தூபியில் இன்று நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் பெருமளவிலான மக்கள் உணர்வுடன் கலந்து திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் அரசியல் தலைவர்கள் பலரும் மலர் சூடி அஞ்சலி செய்தனர்.