SHARE
image_pdfPRINT
புற்றுநோயினால் மற்றுமொரு முன்னாள் போராளி மரணமடைந்துள்ளார்.  முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் 2ஆம் கண்டம் வலதுகரையினை சேர்ந்த சந்திரசேகரம் பிரதீபன் என்ற முன்னாள் போராளியே இவ்வாறு மரணமடைந்துள்ளார
புனர்வாழ்வு பெற்று விடுதலையாகி நிலையில்  சுயதொழில் செய்துவந்த முன்னாள் போராளியான இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை இனம் காணப்பட்டது.
இதனையடுத்து சிகிச்சைக்காக யாழ் மற்றும் கொழும்பு  வைத்தியசாலைகளுக்கு சென்றிருந்த நிலையில் இறுதியில் சிகிச்சை பலனின்றி நேற்றயதினம் (29) உயிரிழந்துள்ளார்.
அண்மைய நாட்களில் புனர்வாழ்வின் பின்னர் சில போராளிகள் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களாலும் மர்மமாகவும் மரணமடைந்து வரும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்நிலையலேயே தற்போது  சந்திரசேகரம் பிரதீபனினின் மரணமும் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.