இனவாத மோதல்களைத் தொடர்ந்து இன்று முதல் எதிர்வரும் 10 நாட்களுக்கு நாடுமுழுவதும் அவசரகால சட்டம் பிரகடணப்படுத்தவுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்க சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே இதனை அவர் தெரிவித்தார்.
இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கண்டி -திகன மற்றும் தெல்தெனிய பகுதிகளில் சிங்கள- முஸ்லிம் மக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலினைத் தொடர்ந்து நேற்றைய தினம் கண்டி நிர்வாக எல்லைக்குள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.