SHARE
எமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு பல இடங் களிலும் முறையிட்டு விட்டோம். ஆனால் எதுவித பயனும் கிடைக்கவில்லை. எமது பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள் என்று காணாமல்போனோரின் உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

எமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு

பல இடங் களிலும் முறையிட்டு விட்டோம். ஆனால் எதுவித பயனும் கிடைக்கவில்லை. எமது பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள் என்று காணாமல்போனோரின் உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

veerakesari

மெக்ஸ்வெல் பர­ண­கம தலை­மை­யி­லான ஜனாதி­பதி ஆணைக்­கு-­ழுவின் விசா­ர­ணைகள் சாவ­கச்சேரி பிர­தேச

செயலர் பிரிவில் நேற்றைய தினம் இடம்­பெற்­ற­போதே தமது உறவுகளை தொலைத்து விட்டு தவிக்கும் மக்கள், ஆணைக்குழு அதிகாரி களிடம் இந்த கோரிக்கையை விடுத்தனர்.

இந்த விசாரணை அமர்வில் சாவ­கச்­சேரிப் பகு­தியைச் சேர்ந்த ஆசி­ரி­ய­ரான ஸ்ரீஸ்­வரி புஸ்­ப­ராசா என்ற தாய் சாட்­சி­ய­ம­ளிக்­கையில்,

யாழ்ப்­பா­ணத்தில் ஏற்­பட்ட இடப்­பெ­யர்­வினை அடுத்து வன்னி நோக்கி நாம் குடும்­பத்துடன் இடம்­பெ­யர்ந்­தி­ருந்தோம். இந்­நி­லையில் காணா­மல்­போன புஸ்­ப­ராசா அஜிந்தன் (வயது 18) என்ற எனது மகன் மல்­லாவி மத்­திய கல்­லூ­ரியில் உயர்­த­ரத்தில் கல்வி கற்று வந்தார்.

இதன்­போது 2008 ஆம் ஆண்டு தை மாதம் 26 ஆம் திகதி விடு­த­லைப்­பு­லிகள் எனது மகனை பிடித்துச் சென்­றி­ருந்­தனர். இவ்­வாறு பிடித்துச் செல்­லப்­பட்ட எனது மகன் மீண்டும் எம்­மிடம் தப்­பித்து வந்­தி­ருந்தார். இத­னை­ய­டுத்து இரண்­டா­வது தட­வையும் விடு­த­லைப்­பு­லி­களால் எனது மகன் பிடித்துச் செல்­லப்­பட்டு மீண்டும் தப்­பித்து வந்த நிலையில் உற­வினர் வீட்டில் சுமார் ஒரு வருடம் அவரை மறைத்து வைத்­தி­ருந்தோம். எனினும் மூன்றாம் தட­வை­யா­கவும் விடு­த­லைப்­பு­லிகள் எனது மகனை கைது செய்­தி­ருந்­தனர் . இந்­நி­லையில் அவர்­க­ளி­ட­மி­ருந்து மீண்டும் தப்­பித்து வந்த எனது மகனை முள்­ளி­ய­வளை புது­மாத்­தளன் பகு­தியில் 200-9ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி இறு­தி­யாகக் கண்­டி­ருந்தோம். அதன்­போது அவ­ருடன் கதைப்­ப­தற்­கான சந்­தர்ப்பம் எமக்குக் கிடைக்­க­வில்லை.

இந்­நி­லையில் நாம் இரா­ணுவக் கட்­டுப்­பாட்­டிற்குள் வந்­ததன் பின்னர் எமது உற­வினர் ஒருவர், 2009 மே மாதம் புது­மாத்­தளன் பகு­தியில் எனது மகனை இரா­ணுவம் பிடித்து வைத்­தி­ருந்­ததை கண்­ட­தாகத் தெரி­வித்­தி­ருந்தார்.

2013, 2014 ஆண்டுகளில் உள்ளூர் பத்­தி­ரிகை ஒன்றில் கைகள் கட்­டப்­பட்­டி­ருந்த நிலையில் எனது மக­னுடன் பலர் நிலத்தில் இருத்தி வைக்­கப்­ப­பட்­டுள்­ள­துடன் சுற்­றி­வர இரா­ணு­வத்­தினர் நிற்­ப­தாக புகைப்­படம் ஒன்று பிர­சு­ரிக்­கப்­பட்டு வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது.

இத­னை­ய­டுத்து குறித்த பத்­தி­ரி­கையின் ஆதா­ரத்­தோடு எனது மகனை மீட்­டுத்­த­ரு­மாறு மனித உரிமை ஆணை­ய­கத்­திலும் வேறு பல இடங்­க­ளிலும் முறை­யிட்­டி­ருந்தேன்.

எனினும் இது­வரை எந்தப் பதிலும் எமக்குக் கிடைக்­கப்­பெ­ற­வில்லை. தயவு செய்து எனது மகனை திருப்பித் தாருங்கள். எனது மகன் உயி­ரு­ட­னேயே உள்ளார் என குறித்த தாயார் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார்.

சிவில் காரி­யா­ல­யத்தில் வைத்து எனது மகன் காணா­மல்­போ­யுள்ளார்

இதேவேளை கையெ­ழுத்து வைக்­கப்­ப­ட­வேண்­டு­மென இரா­ணு­வத்தால் கொடி­காமம் சிவில் காரி­யா­ல­யத்­திற்கு அழைக்­கப்­பட்ட மகன் காணா­மல்­போ­யுள்­ள­தா­கவும் இதன் பின்­ன­னியில் தமது ஊரைச் சேர்ந்த மகா­லிங்கம் என்­பவர் செயற்­பட்­டுள்­ள­தா­கவும் எழு­து­மட்­டுவாள் தெற்குப் பகு­தியைச் சேர்ந்த கந்­த­சாமி பரி­மளம் எனும் தாய சாட்­சி­ய­ம­ளித்­தார்.

2008 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி காணா­மல்­போன கந்­த­சாமி ஹரி­கரன் (வயது 18) என்ற தனது மகன் தொடர்பில் ஆணைக்­குழு முன்­னி­லையில் மேலும் சாட்­சி­ய­ம­ளிக்கையில்

என்­னு­டைய மகனை விடு­த­லைப்­புலி அமைப்பைச் சேர்ந்­தவர் எனக்­கூறி கொடி­காமம் இரா­ணுவ சிவில் காரி­யா­ல­யத்­திற்கு வந்து கையெ­ழுத்து இடு­மாறு அழைக்­கப்­பட்­ட­டி­ருந்தார்.

இதன் போது அவரை அழைத்துக் கொண்டு நானும் ஆரம்­பத்தில் சென்­றி­ருந்தேன். பின்னர் என்னை அங்கு வர­வேண்டாம் எனவும் மக­னை­மட்டும் அனுப்பி வைத்தால் போதும் என அங்­கி­ருந்த இரா­ணுவ அதி­கா­ரிகள் என்­னிடம் தெரி­வித்­தி­ருந்­தனர். கையெ­ழுத்து இடு­வ­தற்கு மட்­டுமே என எண்ணி கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி தனி­யாக எனது மகனை அனுப்பி வைத்­தி­ருந்த நிலையில் அவர் அன்­றைய தினம் வீட்­டுக்குத் திரும்­ப­வில்லை.

இந்­நி­லையில் அவர் அங்­குள்ள இரா­ணு­வத்­தி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார் என்­பதை பின்னர் அறிந்­து­கொண்டேன். எனது மகனின் கைதின் பின்­ன­னியில் எமது ஊரைச் சேர்ந்த மகா­லிங்கம் என்­பவர் செயற்­பட்­டுள்­ளமை தெரி­ய­வந்­தது. எனினும் அவர் தற்­போது எமது ஊரில் இல்லை. எங்­கு­சென்றார் என்­பதும் தெரி­யாது.

அத்­துடன் குறித்த சிவில் காரி­யா­ல­யத்தில் குமார, நரையன் என இரண்டு இரா­ணுவ அதி­கா­ரி­க­ளையும் எனக்குத் தெரியும் எனத் தெரி­வித்தார்.

மேலும் தனது மகன் சாவ­கச்­சேரி சர­சாலைப் பகு­தி­யி­லேயே தற்­போதும் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவரை அங்­கி­ருந்து மீட்டுத் தரு­மாறும் குறித்த ஆணைக்­குழு அதி­கா­ரி­க­ளிடம் அவர் கோரிக்கை விடுத்­தி­ருந்தார்.

கோவிலில் தங்கி நின்ற மகன்­களை இரா­ணு­வமே பிடித்துச் சென்­றது

கொடி­காமம் இரா­மச்­சந்­திரன் செல்­லம்மா என்ற தாய் சாட்­சி­ய­ம­ளிக்­கையில்,

இரா­மச்­சந்­திரன் இரா­ச­குமார் (வயது 24) என்ற எனது மகன் கோவிலில் இர­வு­வே­லைக்­காக தங்கி நின்­றுள்ளார். இதன்­போது அங்கு சென்ற இரா­ணு­வத்­தினர் அவர்­களைப் பிடித்துச் சென்­றுள்­ளனர். இத­னை­ய­டுத்து வரணி இரா­ணுவ முகா­மிற்கு சென்ற நாம் எமது பிள்­ளை­களை விடு­விக்­கு­மாறு கோரி­யி­ருந்தோம். இதன்­போது எமது பிள்­ளை­களை தாங்கள் பிடிக்­க­வில்லை எனவும் இப்­ப­கு­திக்குள் மீண்டும் மீண்டும் வரு­வதை தவிர்த்துக் கொள்­ள­வேண்டும் என வும் தெரி­வித்­தி­ருந்­தனர்.

இத­னை­ய­டுத்து நாம் பொலி­ஸிலும் முறைப்­பாடு செய்­தி­ருந்தோம். அவர்­களும் இடை­யி­டையே விசா­ரணை என எம்­மோடு வந்து கலந்­து­ரை­யா­டி­விட்டுச் செல்­வார்கள்.

எனினும் காணா­மல்­போன எனது மகன் உட்­பட எட்­டுப்பேர் தொடர்பில் எவ்­வித பதிலும் கிடைக்­கப்­பெ­ற­வில்லை எனத் தெரி­வித்தார்.

மல்­லிகா தேவி என்ற தாய் காணாமல் போன சிவா­னந்தம் (வயது 24) என்ற மகன் தொடர்பில் சாட்­சி­ய­ளிக்­கையில்,

காணாமல் போன தன்­னு­டைய மகனின் பெயர் உள்ளூர் பத்­தி­ரிகை ஒன்றில் வெளி­வந்­துள்­ள­தா­கவும் அவரை கடத்­தி­ய­வர்கள் தற்­போது வரை உயி­ரு­ட­னேயே வைத்­துள்­ள­தாக தெரிவித்தார்.

இதனையடுத்து மந்துவில் வடக்கைச் சேர்ந்த கந்தசாமி லோகநாயகி என்ற தாய் காணாமல்போன கந்தசாமி பரிமேலழகர் (வயது 29) என்ற மகன் தொடர்பில் சாட்சியம் அளிக்கையில்

என்னுடைய மகன் கோவிலில் நின்றிருந்த அன்று இரவுவேளை பலத்த வெடிச் சத்தங்கள் கேட்டன. இதனையடுத்து அதிகாலை எனது மகனைத் தோடி குறித்த கோவிலுக்குச் சென்றிருந்தேன். அங்கு எனது மகன் உட்பட எட்டுப்பேரின் கைகளும் வயர்களினால் கட்டப்பட்டிருந்தன. இதன்போது அங்குவந்த “பவல்” வாகனத்திற்குள் இராணுவத்தினரால் எமது பிள்ளைகள் தூக்கிப் எறியப்பட்டதையடுத்து வரணியை நோக்கி பவல் வாகனம் சென்றதாக கண்ணீர்மல்க சாட்சியமளித்திருந்தார்.

source: http://www.virakesari.lk/article/3725