அபுதாபியில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் போலியான க
டவுச் சீட்டை பயன்படுத்தி கிரேக்கம் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு செல்ல முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அபுதாபியின் குடிவரவுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர்கள், இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டதன் பின்னர். அவர்கள் இருவரும் இலங்கையின் சீஐடியினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த இருவரும் யாழ்ப்பாணம் மற்றும் வல்வெட்டித்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

