பிரித்தானியாவில் (UK) இடம்பெற்று வரும் குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் கலவரங்களின் காரணமாக அங்கு பயணம் செய்வது பாதுகாப்பற்றது என பல நாடுகள் தமது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
இதற்கமைய, நைஜீரியா, மலேசியா, அவுஸ்திரேலியா, இந்தோனேஷியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளே பிரித்தானிய பயணம் குறித்து மக்களை எச்சரித்துள்ளனர்.
அதேவேளை, பிரித்தனாயாவில் தற்போது வசித்து வரும் மற்றும் அங்கிருந்து சொந்த நாட்டுக்கு திரும்பவுள்ள மக்களையும் போராட்டங்கள் மற்றும் கலவரங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறும் குறித்த நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.