SHARE

பிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நினைவேந்தல் நாளில் சிறிலங்காவில் போரினால் இறந்தவர்களை கணக்கெடுக்கும் பணி முன்னெடுக்கப்பட்டது.

2009 ஆம் ஆண்டு சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மாபெரும் இனப்படுகொலை இடம்பெற்று இன்றுடன் 15 ஆண்டுகள் ஆகி உள்ள நிலையில் தாயகம் மற்றும் உலகமெங்கிலும் உள்ள தமிழர்கள் போரில் படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் பிரித்தானியாவிலும் தலைநகர் லண்டனில் உள்ள பிரதமரின் வாசஸ்தல முன்றலிலும் ஒக்ஸ்போர்ட் நகரில் உள்ள உலகத்தமிழர் வரலாற்று மையத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் புலம்பெயர் தமிழர்களால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே மேற்படி இரு இடங்களிலும் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் இலங்கையில் யுத்தத்தின் போது இறந்தவர்களின் பெயர் விபரங்கள் செயற்பாட்டாளர்களினால் கணக்கெடுக்கப்பட்டன.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப்போர் 2009 ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்த நிலையிலும் இன்றுவரை யுத்தத்தால் கொல்லப்பட்டவர்களின் பெயர் விபரங்களோ பட்டியலோ யாரிடமும் இல்லை. இதனால் இறந்தவர்களை கணக்கெடுக்கும் செயற்திட்டத்தை சர்வதேச உண்மை மற்றும் நீதித்திட்டத்திற்கான அமைப்பு (ITJP) மற்றும் மனித உரிமைகள் தரவு ஆய்வுக்குழு (HRDAG) ஆகிய அமைப்புகள் இணைந்து முன்னெடுத்துவருகின்றன.

இதன் மூலம் உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்களை ஆவணப்படுத்தி சர்வதேச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற அநீதியை சட்டரீதியாக நிரூபிக்க முடியும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன்பாக முன்பாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைநேந்தல் நிகழ்வில் இறந்தவர்களை கணக்கெடுக்கு பணியினை செயற்பாட்டாளர்களான சசிகரன் செல்வசுந்தரம்,
மநுமயூரன் கிருபானந்த மநுநீதி, ஜெஸ்லின் உதயராணி யோகானந்தம், தனுஷாத் மரியநேசன், மேகலக்சன் சந்திரவர்மன், நிலானி சந்திரபர்மன், பிரசாந் இராசரத்தினம், றோய் ஐக்‌ஷான் யேசுதாசன், சிவலிங்கம், புஸ்பகாந், கங்காதரன் ரிலக்ஸ்சன், தங்கவேலாயுதம் வானுசன், முரளீதரன் விஐயசுந்தரம்,வேலும்மயிலும் சுபேகா, விஷ்வா றமேஷ், விதுரா விவேகானந்தன், விதுஷன் கணேசமூர்த்தி, அமல்ராஜ் ஜெயக்குமார், கனகசபாபதி கார்த்திகேசன், பிரான்சிஸ் அன்ரன் அருள்சீலன், கஜானந் சுந்தரலிங்கம், துஷானி இராஜவரோதயம், நிர்மல் தர்ஷன், சுபமகிஷா வரதராசா, மேரி யூலியானா ஆகியோரும்

ஒக்ஸ்போர்ட் நகரில் உள்ள உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைநேந்தல் நிகழ்வில் செயற்பாட்டாளர்களான புகழினியன் விக்டர் விமலசிங்கம், அழகரெத்தினம் நிரோஜன், கோகுலன் சிவசிதம்பரம், மரியநாயகம் வேதநாயகம், ஈஸ்வரன் டறோஷன், ஜெஸ்லின் உதயராணி யோகானந்தம், சிவநாதன் டிலக்சன், பத்மநாதன் துலக்‌ஷன், உதயராஜா பவசுதன், சந்திரசேகரன் கிஷாந்தன் ஆகியோரும்இறந்தவர்களை கணக்கெடுக்கும் பணியை முன்னெடுத்திருந்தனர்.

பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன்பாக

ஒக்ஸ்போர்ட் உலகத்தமிழர் வரலாற்று மையம்

Print Friendly, PDF & Email