SHARE

தமிழ் இனத்தின் விடிவுக்காக 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பன்னிரு நாட்கள் நீராகாரமின்றி அகிம்சைப்போர் நிகழ்த்திய தியாகதீபம் திலிபனின் 36 ஆவது ஆண்டுகால இறுதிநாள் நிகழ்வு உலகெங்கும் வாழும் தமிழர்களால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது,

இதில் திலீபன் 1987 ஆம் ஆண்டு உண்ணாவிரதமிருந்த நல்லூரில் பொலிசாரின் அச்சுறுத்தல்களை தாண்டி கொட்டும் மழையிலும் பெருமளவிலான மக்களின் வருகையுடன் எழுச்சிபூர்வமாக நினைவுகூறப்பட்டது.

தியாக தீபத்தின் உயிர் பிரிந்த நேரமான காலை 10.48 மணிக்குஇ மூன்று மாவீரர்களின் தாயும்இ நாட்டு பற்றாளரின் மனைவியுமான திருமதி வேல்முருகன் பொதுச்சுடர் ஏற்றினார். அதனை தொடர்ந்து தியாக தீபத்தின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்துஇ மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதேவேளை சம நேரத்தில் நல்லூர் வடக்கு வீதியில் திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்திலும்இ நினைவிடத்திற்கு அருகில் உள்ள திலீபனின் ஆவண கண்காட்சி கூடத்திலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

அத்துடன் இரண்டு தூக்கு காவடிகள் நினைவிடத்திற்கு வந்ததுடன்இ யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நினைவிடத்திற்கு 06 க்கும் மேற்பட்ட ஊர்தி பவனிகள் வந்திருந்தன.

Print Friendly, PDF & Email