SHARE
image_pdfPRINT

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்திற்கு சர்வதேச விசாரணை தேவையில்லை என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் தொடர்பாக அரசியல் செல்வாக்கு இல்லாமல் வெளிப்படையான விசாரணை நடத்தப்படுமானால் உள்ளக விசாரணை மட்டுமே போதுமானதாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எம்பிலிப்பிட்டிய புனித மைக்கல் தேவாலயத்தின் பொன்விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மெல்கம் கர்தினால் ரஞ்சித் இவ்வாறு தெரிவித்துள்ளார்.