வடக்கில் அரசியல் கட்சிகளின் நிலை பரிதாபத்திற்குரியதாகவே உள்ளது. தினமும் பத்திரிகை செய்திகளில் கட்சிதாவல்கள் பற்றிய செய்திகளே வடக்கில் ஆக்கிரமித்திருக்கிறது. தமிழ் மக்களுக்கா ஒன்றுபட்டு நிற்க அவர்களுக்குள் தயார் இல்லை என யாழ்.மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி ஜனஸ்ரின் பெர்னாட் ஞானபிரகாசம் தெரிவித்தார்.
பிரித்தானியாவின் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தினால் வருடாந்தம் யூலை மாதம் (09.07.2023) பிரித்தானிய வோல்சிங்கம் பதியில் கொண்டாடப்படும் திருநாள் திருப்பலியை தலைமை தாங்கி ஒப்புகொடுத்த பின்னரான சிறிலங்காவில் தற்போதைய நிலை பற்றியும் ஆற்றிய விசேட உரையிலேயே யாழ். ஆயர் மேற்கண்டவாறு கூறினார்.
அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
13 ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டுவருவது பற்றிய கதைத்தாலே பொளத்த பேரினவாதம் முதலில் குறுக்கிட்டு ஈழம் கொடுக்க போகிறார்கள் என்றே அதனை திரிவு படுத்துகிறார்கள். அது ஏற்கனவே இருப்பதை தான் தருவது என்பது அவர்களுக்கு விளங்கவில்லை. அது முதலில் தமிழர்களுக்கு போதாதது. ஆனால் அதையே கொடுப்பதற்குரிய நிலை இலங்கையில் இல்லை. இது பௌத்த சிங்கள நாடு என்பதே அவர்கள் கூறுகிறார்கள். அப்படியானால் நாங்கள் யார் என்று ஆயர் கேள்வி எழுப்பினார்.
13 ஆவது திருத்தச்சட்டம் என்ன என்பது தெரியாத அரசியல் வாதிகளே பலர் அரசாங்கத்தில் உள்ளனர். சரத் வீரசேகரவிற்கு அது என்னவென்பதே தெரியாது. அதிலும் மொட்டு கட்சி எனப்படும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வில் 13 ஆவது திருத்தச்சட்டம் பற்றிய போதிய விளக்கமில்லாத அரசியல் வாதிகள் பலரே உள்ளனர்.
ஆனால் இவை அனைத்தையும் சமாளிக்கக்கூடிய தந்திர நரி ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவே. ராஜபக்ஷக்களை தனது கை இடுக்கையில் வைத்துக்கொண்டு தேர்தலை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் வடக்கை பொறுத்தவரையில் எமக்குரிய வசதிகளை தந்தால் நாங்களாகவே எங்களை அபிவிருத்தி செய்வோம். அதே நேரம் அரசியல் வாதிகள் தெற்கிலும் வடக்கிலும் எந்தவித பயனுமற்ற நிலையிலேயே இருக்கிறார்கள். அதில் வடக்கில் அரசியல் கட்சிகளின் நிலை பரிதாபத்திற்குரியதாகவே உள்ளது. தினமும் பத்திரிகை செய்திகளில் குத்துக்கரணம் அடித்து கட்சிதாவல்கள் பற்றிய செய்திகளே வடக்கில் ஆக்கிரமித்திருக்கிறது. அது ஏன் என்று கேட்டால் தமிழ் மக்களின் விடுதலைக்கே தாங்கள் தாவுவதாக கூறுகிறார்கள். ஆனால் தமிழ் கட்சிகள் ஒன்றாக இருந்தால் நாங்கள் பெரும் பலமாக அரசாங்கத்திடம் எதனையும் கொரலாம் என நான் பல தடவைகள் அவர்களுக்கு கூறியிருக்கிறேன்
அதேவேளை தமிழர்கள் முதலில் முன்னேறு வேண்டும் மற்றவர்களில் நம்பிக்கை வைத்து வாழ வேண்டும். போட்டி பொறாமைகளை விடுத்து மற்றவர்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை உருவாக்க வேண்டும் என்றார்.