SHARE

பிரித்தானியாவில் தவத்திரு வேலன் சுவாமிகள்

பொதுசன வாக்கெடுப்பு ஒன்றின் மூலமே தமிழர்களுக்கான நிரந்தர தீர்வினை அடையமுடியும். எனவே பிரித்தானியா இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளதாக பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தவத்திரு வேலன் சுவாமிகள் நமது ஈழநாட்டிற்கு தெரிவித்தார்.

அதேநேரம் ஈழத் தமிழர்களுக்கு 2009 மே யில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதையும் பிரித்தானியா அங்கீகரிக்க வேண்டும் என கோரியுள்ளதாகவும் கூறினார்.

தாயகத்தில் தொடர்ந்து கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இனப்படுகொலை தொடர்பிலும் அதனை பிரித்தானியா தடுக்க முன்வரவேண்டும் என்று கோரியும் கடந்த வாரம் (14 துரநெ) பிரித்தானியா பாராளுமன்றில் சிறப்பு மாநாடு என்று இடம்பெற்றது.

இதில் தாயகத்தின் அரசியற் செயற்பாட்டாளர்கள், பிரித்தானியா அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரித்தானிய அரசியற் செயற்பாட்டாளர்கள் என சுமார் 100 ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த தவத்திரு வேலன் சுவாமிகள் குறித்த மாநாட்டில் சிறப்புரையாற்றியிருந்தார். பின்னர் நிகழ்வின் நிறைவில் நமது ஈழநாட்டிற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கொண்டவாறு பிரித்தானியாவிடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக குறிப்பிட்டார்.

வீடியோ – தி. சிதம்பர சுப்பிரமணியன்

Print Friendly, PDF & Email