SHARE
image_pdfPRINT

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் நாளை(வியாழக்கிழமை) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

கூட்டமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பேச்சாளர், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும், அமைச்சர்களான, டக்ளஸ் தேவானந்தா, விஜேதாஸ ராஜபக்ஷ, அலி சப்ரி ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வு குறித்து, எதிர்வரும், 10ஆம், 11ஆம் மற்றும் 13ஆம் திகதிகளில், ஜனாதிபதிக்கும், தமிழத் தேசியப் பரப்பில் இயங்கும் அனைத்து கட்சிகளுக்கும் இடையே தொடர் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், அதற்கு முன்னாயத்தமாக, நாளைய சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.