SHARE
image_pdfPRINT

இலங்கை பொருளாதார மற்றும் இனப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வைக் காணவேண்டிய நேரம் வந்துவிட்டதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும் நோர்வேயின் முன்னாள் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

மீண்டும் இலங்கையில் அரசியல் கட்சிகளுடனான தொடர் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ள எரிக் சொல்ஹெய்ம் நேற்றைய தினம் (19) சம்பந்தனுடனான சந்திப்பொன்றினை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையிலேயே மேற்படி சந்திப்பு குறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்த சொல்ஹெய்ம் இலங்கை தமிழ் அரசியலில் சம்பந்தன் மகத்தான மனிதர் என புகழாரம் சூட்டியதுடன் அவர் பொருளாதார இனப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படவேண்டும் என கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.