SHARE
image_pdfPRINT

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றுமாறு கோரி தொடர் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக முல்லைத்தீவு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அலுவலகத்தை இன்று திங்கட்கிழமை காலை முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தில் குதித்துள்ளனர்

மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எரிபொருள் கிடைக்காதமை போன்ற பிரச்சினைகளினால் முல்லைத்தீவில் மீனவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர் .

தமது நிலைமையை புரிந்து கொள்ளாத அதிகாரிகள் சட்டவிரோத தொழிலுக்கு உடந்தையாக உள்ளதாகவும் அவர்களை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

மீனவர்கள் கடற்தொழில் நீரில்வள திணைக்களத்தின் நுழைவாயிலுக்கு அருகில் கொட்டகை அமைத்து மீனவர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.