SHARE

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி மற்றும் அதன் பின்னர் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் எரிப்பு மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த விசாரணைகள் தொடர்பிலேயே  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு  பந்துல குணவர்தன, பிரசன்ன ரணதுங்க மற்றும்  விமல் வீரவன்ச ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைத்ததாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதுதொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை, கடந்த மே மாதம் 09 ஆம் திகதி மற்றும் அதற்குப் பின்னரான காலப்பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விசாரணைக்காக உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் பலரும் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Print Friendly, PDF & Email