SHARE

போர்க்குற்றவாளியான இலங்கை இராணுவத்தளபதி சவேந்திரசில்வா மீது உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகார சட்டத்தின் கீழ் (Global Human Rights Sanctions Regime 2020) பிரித்தானியா தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் Stephen Metcalfe, சவேந்திர சில்வாவை தடைசெய்வது தொடர்ப்பில் தான் வெளிப்படையான ஆதரவு வழங்குவேன் என உறுதியளித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான நிகழ்த்தப்பட்ட மாபெரும் இனப்படுகொலையின் போது இராணுவப்படைப்பிரிவிற்கு பொறுப்பதிகாரியாகவிருந்த சவேந்திர சில்வாவை பிரித்தானியா தடைசெய்யவேண்டுமென்று கோரி ஆதரவு திரட்டும் நோக்கில் பிரித்தானியவாழ் தமிழ் இளையோரால் முன்னெடுக்கப்பட்டுவரும் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான தொடர் சந்திப்புக்களில் South Basildon and East Thurrock தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினர் Stephen Metcalfe அவர்களுடனான மெய்நிகர் வழி ஊடான சந்திப்பின் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி பாராளுமன்ற உறுப்பினரின் தொகுதியில் வசிக்கும் செயற்பாட்டாளர் தவராசா நிதர்சனினால் ஏற்பாடு செய்யப்பட்டு நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த மெய்நிகர் சந்திப்பில் தலைமையுரையாற்றிய மனித உரிமை செயற்பாட்டாளரும் சட்ட ஆலோசகருமான திரு கீத் குலசேகரம் அவர்கள் இ இறுதியுத்தத்தில் ஆயிரக்கணக்கிலான பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கு, அந்த நேரத்துல் 58 ஆவது இராணுவ படைப்பிரிவிற்கு பொறுப்பாக இருந்த சவேந்திர சில்வாவே காரணம் என்பதையும்இ இவரது கட்டளையின் கீழே வைத்தியசாலைகள் மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் நடைபெற்றதற்கான ஆதராங்களை ஐவுதுP என்ற அமைப்பு பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுக்கு (FCDO) சமர்ப்பித்திருப்பதை சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரிடன் சரண்டைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் அரசியல் கைதிகள் இன்னும் விடுதலைசெய்யப்படவில்லை என்ற விடயங்களையும் எடுத்துக்கூறினார்.

மேலும் கடந்த இருவருடங்களுக்குள் சித்திரவதைக்கு உள்ளான 200 பேரின் ஆதாரங்களை ICPPG பிரித்தானிய அரசுக்கு வழங்கியிருந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது மிகவும் ஏமாற்றமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். பிரித்தானியாவே இலங்கையில் இனப்பிரச்சனைக்கு வித்திட்ட காரணத்தாலும்இ தொடர்ந்தும் இராணுவ ஆயுதங்களையும் பயிற்சியையும் வழங்கி வருவதாலும்இ தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்கவேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உள்ளது என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

அதேவேளை, செயற்பாட்டாளர் தவராசா நிதர்சன் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள்இ இறுதி யுத்தத்தின் சாட்சியங்களாக வாழ்பவர்கள் மற்றும் சித்திரவதையில் தப்பித்தவர்கள் சார்பில் தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
இந்நிலையில் மேற்படி கருத்துக்களை ஆர்வத்துடன் செவிமடுத்த பாராளுமன்ற உறுப்பினர் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் தனது கவலையை வெளிப்படுத்தியதுடன் சவேந்திர சில்வா மீதான தடைக்கு தனது பூரண ஆதரவை வழங்குவதாகவும் பாராளுமன்ற விவாதத்தில் இதுகுறித்து பேசுவதாகவும் உறுதியளித்தார்.

Print Friendly, PDF & Email