SHARE

பிரித்தானிய மனித உரிமை செயற்பாட்டாளர்களின் தொடர் முயற்சி

பிரித்தானியாவின் ஹைவீகம் (High Wycombe) பிராந்தியத்தின் நாடாளுமன்ற உறுப்பினரான மதிப்பிற்குரிய ஸ்ரிவ் பேக்கர் (Hon. Steve Baker MP) அவர்களுடன் இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி மற்றுமொரு உயர்மட்ட சந்திப்பு ஒன்று 28.04.2022 ஆம் திகதி காலை 10 மணியளவில் Microsoft Teams ஊடாக இடம்பெற்றுள்ளது.

யுத்தக்குற்றவாளியான சவேந்திர சில்வாவிற்கு எதிரான தடை தொடர்பான இராஜதந்திர நகர்வில் ஒர் அங்கமாக, சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாட்டாளுமான திரு கீத் குலசேகரம் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த முக்கிய சந்திப்பில் பழமைவாதக்கட்சிக்கான தமிழர்கள் அமைப்பின் (British Tamil Conservatives – BTC) செயலாளர் திரு. கஜன் ராஜ் The Sri Lanka Campaign for Peace and Justice (SLC) அமைப்பின் பிரச்சார பணிப்பாளர் மெலிசா றிங் (Melissa Dring), மற்றும் அதன் பிரதிப்பணிப்பாளர் பென்ஜமின் குமார் மொறிஸ் (Benjamin Kumar Morris) ஆகியோர் பிரதான பேச்சாளர்களாக கலந்துகொண்டு கருத்துக்களை பரிமாறினர்.

இலங்கையில் சித்திரவதையால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களும் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுமான திருமதி. ரஜினிதேவி ரகுநாதன் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் நிலக்ஜன் சிவலிங்கம், காண்டீபன் ஞானசீலன், , கதாதரன் நாகராஜா, ஜெயகாந் ரகுநாதன் மற்றும் கிறிஸ்ரி நிலானி காண்டீபன் ஆகியோரும் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். கீத் குலசேகரம் அவர்கள் கருத்துத்தெரிவிக்கும் போது இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின் போதும் அதற்குப்பின்னரும் தொடர்ந்து இடம்பெறும் ஆள் கடத்தல் சித்திரவதைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படவேண்டியதன் அவசியத்தையும், தற்போது தொடரும் கடத்தல்கள் சித்திரவதைகளில் இராணுவம் ஈடுபட்டு வருவதற்கான ஆதாரங்களாக இலங்கையில் கடந்த ஒரு வருடத்திற்குள் மட்டும் சித்திரவதைக்குள்ளாகிய 100 பேரின் வாக்குமூலங்களை ICPPG பெற்றிருப்பதனையும் பிரித்தானிய தடயவியல் நிபுணர்களின் அறிக்கைகளால் அவர்களிற்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகளை உறுதிப்படுத்துத்தப்பட்டிருப்பதனையும் குறிப்பிட்டதுடன் சவேந்திர சில்வாவினை தடைசெய்ய போதுமான ஆதாரங்களை ITJP மற்றும் ICPPG பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு சமர்ப்பித்திருந்தும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு இன்னும் உரிய நடவடிக்கை எடுக்க தவறியிருப்பதனை சுட்டிக்காட்டினார்.

அத்துடன் தங்கள் தொகுதியிலுள்ள பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் சார்பில் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடை செய்யக்கோரி FCDO விற்கு அழுத்தம் கொடுக்கும் படியும் கேட்டுக்கொண்டார். அத்துடன் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் அடிப்படையில் வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் மேல்முறையீடு (Appeal) அல்லது சட்டமீளாய்வு (Judicial Review) கோரி விண்ணப்பிப்பதற்கு குறித்த சட்டத்தில் இடம் உண்டா என்பதையும் தெளிவுபடுத்தும்படியும் கேட்டுக்கொண்டார்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கில் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கான மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் ஜே.வி.பி யின் காலத்திலும் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்களின் மூலம் இலங்கை பாரிய போர்க்குற்றங்கள் புரிந்தமை வெளிப்படையாகவே இருப்பினும், இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடைசெய்ய போதுமான ஆதாரங்களை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு ஏற்கனவே ஐவுதுP சமர்ப்பித்திருந்தும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு எந்தவொரு உண்மையான நடவடிக்கையினையும் இதுவரை எடுக்கவில்லையெனவும் இது தமக்கு ஏமாற்றத்தினையும் தராதது வருத்தத்தையும் தருவதாக மெலிசா றிங் தனது உரையில் தெரிவித்தார்.

அத்துடன் அமெரிக்கா சவேந்திர சில்வாவை தடை செய்தமையை போன்று ஜ.நா மனித உரிமைகள் பேரவையில் முக்கிய பொறுப்பினை வகிக்கும் பிரித்தானியாவும் தடை செய்யவேண்டுமென மேலும் அவர் வலியுறுத்தினார். பழமைவாதக்கட்சிக்கான தமிழர்கள் அமைப்பின் செயலாளர் திரு. கஜன் ராஜ் அவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது தாங்கள் பல தடவைகள் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு APPGT இனால் யுத்தக்குற்றவாளியான சவேந்திர சில்வாவினை பிரித்தானியா தடை செய்ய வேண்டுமென பல தடவைகள் கோரியும் இதுவரை அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையென தெரிவித்தார்.

ஸ்ரிவ் பேக்கர் எம்.பி கருத்துத் தெரிவிக்கும் போது 12 வருடங்களிற்கு மேலாக பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் நீதி கிடைக்கவேண்டி போராடி வருவது தான் ஏற்கனவே அறிவேன் எனவும் FCDO இன் இச்செயற்பாடுகள் தனக்கு ஏமாற்றமளிப்பதாகவும் போர்க்குற்றவாளிகளை தடை செய்வதற்கு தம்மாலான முயற்சிகளை எடுப்பதாகவும் FCDO விற்கு தங்கள் தொகுதியிலுள்ள பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் சார்பில் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடை செய்யக்கோரி அழுத்தம் கொடுப்பதாகவும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து பாராளுமன்றில் விவாதிக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.

Print Friendly, PDF & Email