SHARE

நிட்டம்புவ பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றிரவு ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து 29 வயதுடைய ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

எரிபொருள் எடுக்க வந்த மோட்டார் சைக்கிள் சாரதிக்கும் முச்சக்கரவண்டி சாரதிக்கும் இடையில் ஏற்பட்ட தகராறே இந்த சம்பவத்திற்கு காரணமாகியுள்ளது.

முச்சக்கரவண்டியின் சாரதி எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு வெளியே எரிபொருள் நிரப்பிவிட்டு காத்துக்கொண்டிருந்தார்.

பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்தவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முச்சக்கர வண்டி சாரதி, கத்தியால் குத்தியுள்ளார்.

படுகாயமடைந்த நபர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கொழும்பு 14 இல் வசிக்கும் 29 வயதுடையவர் என்றும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

Print Friendly, PDF & Email