SHARE

கடந்த கால யுத்தக் குற்றங்கள் தொடர்பில் தொடர்ந்தும் மறுப்பு நிலையில் இருக்கும் இலங்கை அரசிற்கு எதிராக நடவடிக்கைகளை எவ்வாறு வலுப்படுத்துதல் தொடர்பில் இணையவழி வட்ட மேசை கலந்துரையாடல் ஒன்று நடை பெறவுள்ளது.

ஜஸ்மின் சூக்கா தலைமையிலான சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்திற்கான (ITJP) அமைப்பானது தொன்னாபிரிக்காவிலுள்ள மனித உரிமைகளுக்கான அமைப்பு (FHR) மற்றும் இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் அமைப்பு (JDS) ஆகியவற்றுடன் இணைந்து நடத்தவுள்ள மேற்படி மெய்நிகர் (Zoom) கலந்துரையாடலானது எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதில் Pablo Greift – இடைக்கால நீதி மற்றும் ஐ.நா.வின் புதிய பொறிமுறை பற்றியும், உலகளாவிய நீதித்துறையில் போர்குற்றங்கள் தொடர்பிலான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் Stephen Rapp – பொறிமுறை மற்றும் உலகளாவிய அதிகார எல்லை பற்றியும், பிரியா கோபாலன் – இன மோதல் தொடர்பான பாலியல் வன்முறையும் ஐ.நா.வின் பொறிமுறையும் பற்றியும், சர்வதேச குற்றவியல் சட்வாளரும் இடைக்கால நீதி மற்றும் அநீதிகளிலிருந்து தப்பியவர்களுக்கான தீர்வு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற வழக்கறிஞரான Amanda Ghahremani -தடைகள் பற்றியும், ITJP யின் தலைவர் ஜஸ்மின் சூக்கா – வடிகட்டுதல் மற்றும் ஆய்வுக்கு உட்படுத்துதல் பற்றியும், ஜே.எஸ்.திசாநாயகம் – இலங்கையரின் கண்ணோட்டம் பற்றியும் உரையாற்றவுள்ளனர்.

இதேவேளை இந்த மெய்நிகர் கலந்துரையாடலில் மேற்படி பிரமுகர்களின் உரைகளினைத்தொடர்ந்து கேள்விகள் கேட்பதற்கான சர்ந்தர்ப்பங்களும் வழங்கப்படவுள்ளன.

எனவே இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மாபெரும் யுத்தக்குற்றம் தொடர்பில் அதற்கான நீதியை பெற்றுக் கொள்வதற்கான நகர்வை சர்வதேச வல்லுனர்களிடம் கேட்டறிந்து கொள்வதற்கான சர்ந்தர்ப்பத்தை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

On February 15, 2022 | 14:00 UK | 16:00 RSA | 19:30 Sri Lanka | 09:00 USA East Coast ZOOM http://shorturl.at/kuBU5

Webinar ID: 835 0812 5198

Passcode: 503827

Print Friendly, PDF & Email