SHARE

சர்வதேசசமூகம் இலங்கை அரசுக்கு துணைபோகாமல் எமக்கான நீதியினை வழங்கமுன்வரவேண்டும் என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்தனர்.

வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் வவுனியா பழையபேருந்துநிலையத்திற்கு முன்பாக  இன்று (வியாழக்கிழ்மை) காலை ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், ”எமக்கான நீதி கிடைக்காத நிலையிலும் 12 வருடங்களாக தொடர்ச்சியாக நாம் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

பெறுமதிமிக்க எமது உயிர்களை தொலைத்துவிட்டு நாம் வீதியாக வீதியாக போராடிக்கொண்டு  சொல்லொணா துன்பங்களையும்,அவலங்களையும் அனுபவித்து வருகின்றோம். வருடங்கள் மாத்திரமே கடந்துசெல்கின்றது எமக்கான நீதி மட்டும் கிடைக்கப்பெறவில்லை.

போரிற்கு பின்னர் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட பிள்ளைகளையே நாம் கோரிநிற்கின்றோம்.   இழப்பீட்டையோ வாழ்வாதாரத்தையோ கேட்டுநாம் போராடவில்லை.

சர்வதேசசமூகம் எமக்கான நீதியினை வழங்காமல் இலங்கை அரசுக்கு துணைபோகின்றதா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது, எனவே நீங்கள் கண்மூடியிருக்காமல் எமது நிலைகருதி சாட்சிகளான நாங்கள் இருக்கும் போதே எமக்கான நீதி கிடைப்பதற்குரிய பொறிமுறைகளை சர்வதேசசமூகம் ஏற்ப்படுத்தவேண்டும்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்கே எங்கே உறவுகள் எங்கே, ஆணைக்குழுக்களும் வேண்டாம், விசாரணையும்வேண்டாம், பொய்யான அறிக்கையை வழங்கி சர்வதேசத்தையும் தமிழர்களையும் ஏமாற்றாதே, இனப்படுகொலையாளியை காப்பாற்ற நிறைப்பவர்கள் தமிழினத்துரோகிகள், போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

Print Friendly, PDF & Email