SHARE

இலங்கை போர்க்குற்றவாளிகள் மீதான அமெரிக்காவின் தடையானது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நம்பிக்கை விதை. இது குற்றவாளிகளுக்கு எதிரான குறைந்தளவிலான விசா தடை மட்டுமல்ல. அவர்களின் அதிகாரிகளுக்கான எச்சரிக்கை சமிக்ஞை என என சர்வதேச உண்மை மற்றும் நீதித்திட்டத்திற்கான அமைப்பின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா (ITJP) தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல்களுக்காக இலங்கை இராணுவ அதிகாரிகள் மேலும் இருவருக்கு அமெரிக்கா இன்று தடை விதித்துள்ளதை வரவேற்று சற்று முன்னர் ITJP வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இநடைபெற்ற போர்க்குற்றம் மற்றம் மனித உரிமை மீறல்களுக்காக கடந்த ஆண்டு (2020) இல் இலங்கை இராணுவத் தளபதி சவேந்தி சில்வாவுக்கு எதிராக பயணத்தடை விதித்திருந்த அமெரிக்கா இன்று மேலும் இரு இராணுவ அதிகாரிகளுக்கு தடை விதித்துள்ளது. தி திருகோணமலையில் காணாமல் போன 11 பேருடனான சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கை கடற்படை புலனாய்வு அதிகாரி சந்தன ஹெட்டியாராச்சி மற்றும் 8 தமிழர்களை கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடைய சுனில் ரத்நாயக்க ஆகிய இருவருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதித்துள்ளது.

இந்நிலையிலேயே மேற்படி அமெரிக்காவின் தடை விதிப்பை ITJP யின் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா வரவேற்றுள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அமெரிக்காவின் தடை விதிப்பானது குறித்த குற்றவாளிகளின் அதிகாரிகளுக்கும் இன்னும் பதவிகளிலிருக்கும் போர்க்குற்றவாளிகளுக்கும் ஒரு எச்சரிக்கையாகும். அதிகாரிகள் மீதா குற்றச்சாட்டுக்களை கைவிடுமாறு ஜனாதிபதி பரிந்துரைப்பதும் அதற்கு சாதகமாக ஆணைக்குழுக்களை அமைப்பதும் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குவதும் இன்னும் இலங்கையில் தொடர்கிறது.

இலங்கை உயர் நீதி மன்றில் குற்றவாளிகளுக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் கைவிடப்பட்டதன் பின்னர் நாம் தொடர்ந்தும் நீதிக்கா போராடுவதில் என்ன பயன் என்று அதில் எங்கு நியாயம் கிடைக்கப்போகிறது என்ற நிலமைக்கு தள்ளப்பட்டோம். ஆனால் தற்போது அமெரிக்காவின் தடை செய்தி இதயத்தில் மீண்டும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிக்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.

ஊடக அறிக்கை (அழுத்தவும்)

Print Friendly, PDF & Email